உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பைக்கு பஞ்சமில்லை... அள்ள ஆளில்லை... நாறுது நாகமலை புதுக்கோட்டை

குப்பைக்கு பஞ்சமில்லை... அள்ள ஆளில்லை... நாறுது நாகமலை புதுக்கோட்டை

நாகமலைபுதுக்கோட்டை: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், நாகமலை புதுக்கோட்டையில் அள்ள ஆளில்லாததால் குப்பைக்கு பஞ்சமில்லாமல் குவிந்து கிடக்கிறது.இப்பகுதியில் சமணர் மலை, மேலக்குயில்குடி செல்லும் ரோடுகளில் தெரு முனைகள், காலி பிளாட்டுகள், நீர்நிலை கரைகள் என திரும்பும் இடமெல்லாம் குப்பை அதிகளவில் குவிந்துள்ளன. எந்த இடத்திலும் குப்பை தொட்டியை காண முடியவில்லை. மதுரை - தேனிமெயின் ரோட்டிலேயே அளவுக்கு அதிகமான குப்பை குவிந்து கிடக்கின்றன. அவை காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன.குறிப்பாக அப்பகுதி பள்ளி, கல்லுாரி முன் குப்பை அதிகளவில் சேருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலிதீன்களுக்கு தடையுள்ள நிலையில், இப்பகுதி கடைகளில் தாராளமாக விற்கப்படுகிறது.கொட்டப்படும் குப்பையில் 90 சதவீதத்திற்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் தான் உள்ளன. அதை மாடுகள் சாப்பிட்டு ஜீரணம் ஆகாமல் இறக்கின்றன.மக்கள் கூறுகையில் ''குப்பையை அகற்ற போதிய ஆட்கள் இல்லை. வாரத்திற்கு இருமுறை தான் குப்பை வண்டி வருகிறது. சுத்தம் செய்த அரைமணி நேரத்தில் மீண்டும் குப்பை சேர்ந்துவிடுகிறது. இறைச்சிக் கடைகளின் கழிவுகளை கொட்டுவதால் நாய்கள் கூடி சண்டையிடுகின்றன. இதனால் நடந்து செல்வோருக்கு அச்சுறுத்தலாக உள்ளது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை