உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் திருமங்கலம்

குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் திருமங்கலம்

திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளும், விரிவாக்க பகுதிகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வைகை கூட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வைகை ஆற்றில் நீர் எடுக்கும் பகுதியில் தண்ணீர் ஊற்று குறைந்ததால் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 38 லட்சம் லிட்டர் விநியோகிக்கப்பட்டது.கோடை காரணமாக தற்போது 12 - 16 லட்சம் லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் வரத்துள்ளது. இதனால் நகர் பகுதியில் முழுமையாக விநியோகிக்கப்பட முடியவில்லை. நேரம் தவறி விநியோகிப்பதால் காலையில் வேலைக்கு செல்வோர் அவதிக்கு உள்ளாகின்றனர். பழைய வைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தை சீரமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கியுள்ளது. எனவே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கூடுதலாக தண்ணீரை பெறவும், பழைய வைகை குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை