கோயில்கழுவடி சுவாமிகள் உற்ஸவம்: காமாட்சி அம்மன் காஞ்சரடி கோயில், முடுவார்பட்டி, ஆதனுார், அம்மன் கரகம் இரண்டு கழுவடி கோயிலுக்கு செல்லுதல், அதிகாலை 4:00 மணி, பொங்கல் வைத்தல், காலை 6:00 மணி, கழுவடி கோயில் முன் 9 சாமிகள் பாடுவிழுதல், காலை 9:00 மணி, அன்னதானம், காலை 10:00 மணி, வள்ளி திருமண நாடகம், இரவு 9:00 மணி.கும்பாபிஷேகம்- - யாகசாலை: செருவலிங்க அய்யனார் கோயில், மேலக்கோட்டை, திருமங்கலம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுசுக்ரீவன் நட்பு - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கருமுத்து கண்ணன் நினைவு அறக்கட்டளை, அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.பொதுமகாத்மா காந்தி தொகுப்பு நுால்கள் - தொகுதி 8 - நுால் மதிப்பாய்வுரை கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வுரை வழங்குபவர்: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், மாலை 5:00 மணி.குடும்ப அமர்வு: செல்லமுத்து கார்டன், ஐயாதம்பட்டி, சிறப்பு விருந்தினர்: மீனாட்சி மருத்துவமனை ஆராய்ச்சி மேம்பாட்டு அதிகாரி சுந்தரராஜ், ஏற்பாடு: செல்லமுத்து ஆராய்ச்சி அறக்கட்டளை, காலை 10:30 மணி.நுால் அறிமுகம், பள்ளி நுாலகங்களுக்கு நுால் கொடை வழங்குதல்: அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, புதுார், மதுரை, ஏற்பாடு: தமிழ் மரபு அறக்கட்டளை, காலை 9:30 மணி.கண்காட்சிஅரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.விருதுநகர் மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியரின் சிறந்த படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை.மருத்துவம்தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச பல் பரிசோதனை முகாம்: நியூ சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக், ஊமச்சிகுளம், பரிசோதிப்பவர்: டாக்டர் சகாய ஜென்ஸி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, இரவு 7:00 முதல் 9:00 மணி வரை.யோகா, தியானம்10வது சர்வதேச யோகா தினம்: கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் ரவிச்சந்திரன், ஹார்லி ராம் மருத்துவமனை ஆலோசகர் சாவித்திரி, க்ளவுட்பீஸ் இயக்குநர் சுரேஷ் பாக்கியம், ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம் இயக்குநர் கங்காதரன், இந்திய யோகா சங்கம், காலை 6:00 முதல் 8:30 மணி வரை.இலவச தியானம், மூச்சுப் பயிற்சி: ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 முதல் 7:00 மணி வரை.