உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் கள்ளிக்குடி, திருமங்கலம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி வட்டார வேளாண், தோட்டக்கலை, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, அறுவடையின் போது மகசூல் அளவை துல்லியமாக கணிக்கும் வழிமுறைகள்குறித்து புள்ளியியல் துறை அதிகாரிகள் பயிற்சி வழங்கும் 2 நாள் முகாமை மதுரை பயிர் காப்பீடு உதவி இயக்குநர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். புள்ளியியல் உதவி இயக்குநர் ராமேஷ்வரி, வேளாண் உதவி இயக்குநர் உதயகுமார், புள்ளியியல் ஆய்வாளர்கள் தாஸ், ரமேஷ் ஆகியோர் பயிற்சி வழங்கினர். இன்று (ஆக.9) நடக்கும் பயிற்சி முகாமில் மகசூல் கணிப்பது குறித்து வயல்வெளியில் செயல்முறை பயிற்சி வழங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !