உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயின் பறித்த இருவர் கைது

செயின் பறித்த இருவர் கைது

திருமங்கலம்: கள்ளிக்குடி வடக்கு தெரு சுப்பையா மனைவி பானுமதி 62. கணவர் இறந்துவிட்ட நிலையில் வீட்டு வாசலில் பெட்டி கடை வைத்துள்ளார். ஜூன் 17ல் இவரது கடைக்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் 25 குளிர்பான பாட்டில்களை கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு இல்லை என மூதாட்டி தெரிவித்த நிலையில், இருப்பதை மட்டும் எடுத்துக் கொடுங்கள் என இளைஞர் தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்த பாட்டில்களை எடுப்பதற்காக மூதாட்டி உள்ளே சென்றபோது பின் தொடர்ந்த வாலிபர் அவரது அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.போலீசார் உசிலம்பட்டி அய்யனார்குளத்தைச் சேர்ந்த முனியப்பன் 38, என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது பூட்டி இருக்கும் வீடு, வீடுகளில் தனியாக இருக்கும் நபர்கள் குறித்து அவருக்கு தகவல் தெரிவித்த டூவீலரில் வீடு வீடாக காய்கறி வியாபாரம் செய்யும் கள்ளிக்குடி கணேசன் 36, என்பவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை