உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராம உதவியாளர் சங்க ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர் சங்க ஆர்ப்பாட்டம்

மதுரை: புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு, தெற்கு தாலுகா அலுவலகங்கள் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகள் தீபன், சுரேஷ் தலைமை வகித்தனர். அழகேசன், குப்பு ஜோதிக்குமார் உட்பட பலர் பேசினர். நிர்வாகிகள் ஜெயச்சந்திரா, முத்துவேல்பாண்டி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மணிகண்டன், கல்யாணசுந்தரம், மாரி உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் அனைத்து அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை