மேலும் செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
27-Feb-2025
மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில்மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், மகளிர் மையம் சார்பில் மகளிர் தினம் விழா நடந்தது.துணை முதல்வர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். மைய ஒருங்கிணைப்பாளர் இந்திராணி வரவேற்றார். உதவி பேராசிரியர் செல்வத்தரசி 'பெண்ணின் பெருமை'தலைப்பில் பேசினார். மாணவி ரோஜா, 'சேது சீமையில் ஒரு வீரத் தமிழச்சி' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தன. மாணவி புனிதவல்லி நன்றி கூறினார். திருப்பரங்குன்றம்
மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி அரசு உதவி பெறும், சுயநிதி பிரிவு சார்பில் மகளிர் தின விழா நடந்தது.கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். மகளிர் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா பேசினார். பேராசிரியர்கள் கவிதா, நந்தினி, தேவி ஒருங்கிணைத்தனர். தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு தலைவர் துரைசாமி, பேராசிரியர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கினர்.
27-Feb-2025