| ADDED : மே 13, 2024 06:16 AM
மதுரை : மதுரை கே.புதுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2024ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு மே 10 முதல் ஜூன் 7 வரை நடக்கிறது. பயிற்சிக் கட்டணம் இல்லை.இதில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித் தொகை, 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும்.சைக்கிள், தையற் கூலியுடன் 2 செட் சீருடை, ஒரு செட் ஷூ, பஸ் வசதி, உணவுடன் கூடிய விடுதி வசதி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.தமிழக அரசின் உத்தரவுப்படி, 10ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ., முடித்தவர்கள், மொழிப்பாடங்கள் மட்டும் கூடுதலாக எழுதி 12ம் வகுப்பு சான்றிதழ், 8ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ., முடித்தவர்கள், மொழிப்பாடங்கள் மட்டும் எழுதி 10ம் வகுப்பு சான்றிதழும் பெற்றுக் கொள்ளலாம்.14 வயது நிரம்பிய 8 / 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாற்றுச் சான்றிதழ், 8 / 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல், ஆதார் அட்டையின் நகல், ஐந்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் காலை 10:00 முதல் மாலை 4:00 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.சேர்க்கை குறித்த விபரங்களை www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.