உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிலம்பம் கற்றால் 10 சதவீதம் இடஒதுக்கீடு

சிலம்பம் கற்றால் 10 சதவீதம் இடஒதுக்கீடு

மதுரை: அகில இந்திய மற்றும் மாநில சிலம்பாட்டக் கழகத்தின் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் முத்துராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் கலைநன்மணி மாமல்லன் வரவேற்றார். மே மாதம் மாநில சிலம்பாட்ட போட்டிகள் நடத்துவது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 28 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.முத்துராமன் கூறுகையில், ''சிலம்பாட்ட பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாநில அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குகிறது. சீருடை பணியாளர், ரயில்வே துறைகளில் வேலை வாய்ப்பு உள்ளது.பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் சிலம்பத்தையும் சேர்த்துள்ளார். சிலம்பத்தில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அமைச்சர் முருகன் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை