உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்

 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்

மதுரை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை நகரில் போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவுபடி 5 துணைகமிஷனர்கள் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீஸ் முன்அனுமதி பெற்று இரவு ஒரு மணிக்குள் முடிக்க வேண்டும். கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். குடிபோதையில் டூவீலரில் அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது, பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் ஓட்டுவது போன்ற செயல்களை தடுக்க நகரின் அனைத்து பாலங்களிலும், வைகை கரை ரோடுகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். தீவிர வாகன சோதனையிலும் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி