உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கொலையில் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

 கொலையில் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி சாந்தி நகர் பாலமுருகன் 40. பெற்றோர் இறந்த நிலையில் பராமரிப்பின்றி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். நவ.,17 காலை ஊர் மயானத்தில் காயங்களுடன் கிடந்தார். போலீசார் விசாரித்ததில் அப்பகுதி கட்டட தொழிலாளர்கள் மாயமானது தெரிந்தது. தொடர் விசாரணையில் யூனியன் ஆபீஸ் காலனி கேசவன் 23, பொட்டுலுபட்டி சேதுபதி பாஸ்கர் 23, மற்றும் 17 வயது 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மயான பகுதியில் குற்றவாளிகள் வழக்கம்போல் மது, கஞ்சா பயன்படுத்திய போது தங்களுக்கு பாலியல் தொல்லை தர முயன்ற பாலமுருகனை போதையில் தாக்கினர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாலமுருகன் நேற்று இறந்தார். இதைதொடர்ந்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ