உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 43 டன் கருவேல மரம் அகற்றம்

43 டன் கருவேல மரம் அகற்றம்

மதுரை : மதுரை மாவட்ட கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து நிலத்தடி நீர்மட்டத்திற்கு வேட்டு வைக்கின்றன. இவற்றை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவுபடி மாவட்டத்தில் 420 ஊராட்சிகளிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கணக்கெடுப்பு நடந்தது. முதற்கட்டமாக 13 ஒன்றியங்களிலும் தலா 2 ஊராட்சிகள் வீதம், 26 ஊராட்சிகளைத் தேர்வு செய்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்த் ஏற்பாட்டில் பணிகளை துவக்கினர். ஊராட்சி கண்மாய்களில் ஏலம் விடப்பட்டு அகற்றி வருகின்றனர். 61.05 எக்டேரில் 43.198 டன் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் அதிகளவாக 9.55 டன் வெட்டப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !