உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

அவனியாபுரம்: டில்லியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து மதுரை விமான நிலைய உள், வெளி வளாக பகுதிகளில் கூடுதல் போலீசாரும், அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான ஓடுதள பாதை, கண்காணிப்பு கோபுரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும், வெளி வளாகத்தில் தமிழக போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள், பயணிகள் தீவிர கண்காணிப்பிற்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்கள் நிறுத்துமிடம், சோதனை சாவடி, பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து மறு உத்தரவு வரும்வரை இச்சோதனை தொடரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே ஸ்டேஷன் மதுரை ரயில்வே ஸ்டேஷனிலும் சோதனை நடந்தது. மதுரை -- குருவாயூர் (16327), பாலக்காடு -- திருச்செந்தூர் (16731), எழும்பூர் - - மதுரை தேஜஸ் (22671) உள்ளிட்ட ரயில்களிலும்சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ