உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 5815 கிலோ கஞ்சா பறிமுதல்  * 2,917 பேர்  கைது

5815 கிலோ கஞ்சா பறிமுதல்  * 2,917 பேர்  கைது

மதுரை: மதுரை நகரில் 2021--2025 காலக்கட்டத்தில் 1,883 கஞ்சா வழக்குகளில், 2,917 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5,815 கி. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த காலத்தில் பறிமுதல் செய்த ஆறாயிரத்து 83 கி கஞ்சா எரி உலையில் அழிக்கப்பட்டன. அதுபோல் 2,485 குட்கா வழக்குகளில் 2,654 பேர் கைது செய்யப்பட்டனர். பதினேழு ஆயிரத்து 427 கி. குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 132 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. காணாமல் போன, திருடு போன 3,412 அலைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை