உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கும்பாபிஷேகத்திற்கு 7 புனித தீர்த்தங்கள்

கும்பாபிஷேகத்திற்கு 7 புனித தீர்த்தங்கள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக 7 புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட உள்ளது.கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் பெருமளவில் நிறைவடைந்த நிலையில் தற்போது யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஜூலை 10ல் யாக பூஜை துவங்குகிறது. யாகசாலையில் வைத்து பூஜிக்கவும், கோபுர கலசங்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தவும், மூலவர்களுக்கு மகா அபிஷேகம் செய்யவும் காசி, ராமேஸ்வரம், பவானி, காவிரி, அழகர் கோவில் நுாபுர கங்கை, திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கை, மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் சுனை தீர்த்தம்ஆகிய 7 புனித தீர்த்தங்களை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களில் சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தங்கள் கொண்டுவர செல்ல உள்ளனர்.அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வன், பொம்மத்தேவன், ராமையா, துணை கமிஷனர் சூரியநாராயணன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை