உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு கலைப்போட்டி

மாணவர்களுக்கு கலைப்போட்டி

மதுரை, : மதுரைக் கல்லுாரியில் பொருளியல் துறை, ஆராய்ச்சி மையம் சார்பில் மாநில அளவிலான கல்லுாரி, பல்கலைகளுக்கு இடையேயான 'மெக்னாமிக்ஸ் -2025' என்ற கலைப் போட்டிகள் நடந்தன. துறைத் தலைவர் தீனதயாளன் வரவேற்றார்.எம்.சி.ஏ.ஏ., செயலாளர் கணபதி சுப்பிரமணியன், சுயநிதி பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் பேசினர். 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், பல்கலை மாணவர்கள் பங்கேற்றனர். தனிப்பாடல், கோலப்போட்டி, முக அலங்காரம், நெருப்பில்லா சமையல், குழு நடனம், தனி நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்று கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி கோப்பை வென்றது.போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சவுராஷ்டிரா கல்லுாரி முதல்வர் சீனிவாசன் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை துறைத் தலைவர் தீனதயாளன், ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், இணை ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தம், பேராசிரியர்கள், மாணவர்கள் செய்தனர். ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை