உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாட்டம் பார்க்காமல் கட்டிய வடிகால்

வாட்டம் பார்க்காமல் கட்டிய வடிகால்

அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் பேரூராட்சியில் கழிவுநீர் வெளியேற 'வாட்டம்' இல்லாமல் கட்டப்பட்ட வடிகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கிறது. இப்பேரூராட்சியில் சந்தை மேடு தெருவில் 20 வீடுகள் உள்ளன. மிக குறுகலான இத்தெருவில் சில மாதங்களுக்கு முன் பேரூராட்சி சார்பில் கட்டிய கழிவுநீர் வாய்க்காலால் தெரு மேலும் சுருங்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பதுடன், சிறுவர்கள், முதியோர் கால்வாய்க்குள் விழும் அபாய நிலையும் உள்ளது. அப்பகுதி முருகன் கூறியதாவது: கிடைத்த நிதியில் வாய்க்காலை கட்டி முடித்துவிட்டனர். ஆனால் கழிவுநீர் செல்ல வழியில்லை. ஒரு பகுதி மேடாக உள்ளது. மற்றொரு பகுதியில் பாசன கால்வாய் செல்கிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொடர்ந்து செல்லாமல், சிமென்ட் கால்வாயில் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மழை நேரங்களில் தெருக்களில் கழிவு நீர் ஓடுகிறது. நிரம்பும் வடிகால் நீரை பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது மோட்டார் வைத்து மற்றொரு வாய்க்காலில் வெளியேற்றுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றி கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என் றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை