உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் முதலுதவி மையம் அவசியம்

குன்றத்தில் முதலுதவி மையம் அவசியம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயில் அருகே பக்தர்கள் வசதிக்காக மூன்று மாதங்கள் தற்காலிக முதலுதவி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வெளியூர்களில் இருந்து ஐயப்பன், முருகன், மேல்மருவத்துார் பக்தர்கள் பல ஆயிரம் பேர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். குன்றத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருப்பதால் பக்தர்கள் இரவில் தங்கி அதிகாலையில் சுவாமி தரிசனம் முடித்து புறப்படுகின்றனர்.மண்டபங்களில் தங்கும் பக்தர்களில் சிலருக்கு எதிர்பாராத விதமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. அப்போது அவர்கள் ஒரு கி.மீ. துாரத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. தேவையான நேரத்தில் வாகன வசதி கிடைப்பதில்லை. இரவு 9:00 மணி வரை அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இரவு 10:00 மணி முதல் காலை வரை உடல் நிலை பாதித்த பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே, கோயில் அருகிலேயே சுகாதார துறையினர் தற்காலிக ( 3 மாதங்களுக்கு) முதலுதவி மையம் அமைத்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை