உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எரியாத மின்விளக்கு

எரியாத மின்விளக்கு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் தனிச்சியம் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் சின்ன இலந்தைக்குளத்தை அடுத்த பாசன ஓடை பாலம் அருகே 'கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல்' அரங்கத்திற்கு செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இந்த அரங்கத்தை 2024 ஜன.24ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தச் சாலை வழியாக குட்டிமேய்க்கிப்பட்டி, அழகாபுரி உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இந்தச் சாலையின் சந்திப்பில் 7 மாதங்களுக்கு முன் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. சோதனை செய்த நாளில் மட்டுமே எரிந்த மின்விளக்கு, அதற்குப் பின் இன்று வரை எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையோரத்தை மது அருந்தும் 'பாராக' மாற்றுகிறது இளைஞர் கும்பல். கும்மிருட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் உயர் கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்குக் கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை