உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முனியாண்டி கோயிலில் அசைவ விருந்து

முனியாண்டி கோயிலில் அசைவ விருந்து

திருமங்கலம் : திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரத்தில் முனியாண்டி சுவாமி கோயிலில் 61வது ஆண்டு பொங்கல் விழா நடந்தது.தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பெயரில் அசைவ உணவகம் நடத்தி வருபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் குடும்பத்துடன் இங்கு ஒன்று கூடி இவ்விழாவை கொண்டாடுவர்.நேற்று மாலை முனியாண்டி சுவாமிக்கு பெண்கள் மலர் தட்டுகளை தலையில் சுமந்து வந்து பூஜைகள் நடத்தினர். அதனை தொடர்ந்து இரவு 100 ஆடுகள், 50 சேவல்கள் மற்றும் 3000 கிலோ அரிசி கொண்டு அசைவ உணவு தயார் செய்யப்பட்டு வந்தவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. தலை குழம்பு, ஈரல் குழம்பு, கறி குழம்பு என விதவிதமான அசைவ குழம்பு தயாரித்து பக்தர்களுக்கு பரிமாறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ