| ADDED : மார் 21, 2024 02:28 AM
ரோடு வேண்டும்மதுரை மாநகராட்சி வார்டு 70 நேரு நகரில் சரியான ரோடு வசதி இல்லை. மக்கள் பயணிப்பது கடினமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மீனாட்சி, மாடக்குளம்.பாதாள சாக்கடை சரிசெய்யப்படுமா மதுரை சிங்கராயர் காலனி மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை இரும்பு மூடி உள்ளே பதிந்தும் வெளியே தெரியும்படியும் இருப்பதால் இரவில் பொதுமக்கள் தடுமாறி விழும் அபாயம் உள்ளது.-- அபுபக்கர், பிபீகுளம்.பழைய மின்கம்பம் இடையூறுமதுரை பழைய குயவர்பாளையம் ரோட்டில் மின்கம்பம் ஒன்று நடுவில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாற்றி அமைக்க மின்வாரியம் முன்வரவேண்டும்.-- சிவராமன், குயவர்பாளையம்.ரோடு சீரமைப்பு தேவைமதுரை பைபாஸ் ரோடு வானமாமலை நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை சீரமைப்புக்கு பின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மணல் குவியலாக உள்ளதால் வீட்டுக்குள் துாசி வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.குமார், வானமாமலை நகர்.கழிவுநீர் தேக்கம்மதுரை மாநகராட்சி 44வது வார்டுக்குட்பட்ட வில்லாபுரம் புது மீனாட்சி நகரில் ஒரு மாதமாக கழிவுநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சித்ரா, வில்லாபுரம்.குப்பை தேக்கம்ஐராவதநல்லுார் ராமதாஸ் சேம்பர் அருகே பல நாட்களாக குப்பை அகற்றாமல் இருக்கிறது. மக்கள் நடந்து செல்ல கடினமாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராம், திருப்பரங்குன்றம்.