உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழைத்தகவல்களை அறிய தனி செயலி

மழைத்தகவல்களை அறிய தனி செயலி

மதுரை: மதுரை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழைக்காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட தகவல்களை தமிழிலேயே அறியும் வகையில், தமிழக அரசு 'TN ALERT' எனும் அலைபேசி செயலியை உருவாக்கி உள்ளது.இச்செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான அனைத்து தகவல்களையம் உடனுக்குடன் அறியலாம். மேலும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அவசர கால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 1077, மாநில கட்டுப்பாட்டு அறை எண்: 1070 ஆகிய எண்களில் அழைத்து தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை