உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் 17 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய கோவில் நிர்வாகி

மதுரையில் 17 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய கோவில் நிர்வாகி

மதுரை; மதுரை, கண்ணனேந்தலைச் சேர்ந்த தொழிலாளியின், 17 வயது மகள், அரசு உதவிப்பெறும் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். வீட்டருகே உள்ள கோவிலுக்கு அடிக்கடி சக தோழியருடன் சென்று வந்தார்.வயிற்றுவலி காரணமாக அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. இதற்கு அந்த கோவில் நிர்வாகி சசிக்குமார், 45, தான் காரணம் என, மாணவியின் தாய் தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.புகாரில் கூறியுள்ளதாவது:பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்ததும் கோவிலுக்கு சென்று சக தோழியருடன் படிப்பார். கோவிலில் துாய்மை பணியிலும் ஈடுபடுவார். வயிற்றுவலி தொடர்பாக மகளை சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, 8 மாத கர்ப்பம் என, தெரிந்து அதிர்ச்சியடைந்தோம். மகளிடம் கேட்டபோது, கோவில் நிர்வாகி சசிக்குமார் தான் காரணம். ஒன்றரை ஆண்டுகளாக மிரட்டி, கோவில் மாடியில் இருக்கும் சசிக்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.இதுகுறித்து, வெளியே சொல்லக்கூடாது என சசிக்குமார் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மகள் மறுத்தபோது, 'கூப்பிடும்போது வர வேண்டும். வரவில்லை என்றால் பெற்றோரிடம் இதுகுறித்து கூறிவிடுவேன்' என, மிரட்டியுள்ளார்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மனைவியுடன் வசிக்கும் சசிக்குமார், மாணவியை பலாத்காரம் செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியானது. அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். மாணவியின் வழக்கறிஞர் மணிமாறன் கூறுகையில், ''சசிக்குமாரிடம் தல்லாகுளம் போலீசார் முழுமையாக விசாரிக்கவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sck
நவ 10, 2024 06:17

கோவில் மாடியில் வைத்தே பலாத்காரமா, பக்தர்களின் காமப்பசி ரொம்பவே அதிகமாகி கொண்டே போகிறதே!! இனி இது போன்றவர்களுக்கு ஒரே தண்டனை, சஞ்ஜே காந்தி ஸ்டைல்தான். இக்கால சந்ததினர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். "ஆண்களுக்கு கட்டாய கருத்தரிப்பு" சோலிய முடிச்சி வைச்சுடலாம்.


நிக்கோல்தாம்சன்
நவ 09, 2024 21:25

அவன் உயிரோடு இருக்க என்ன தகுதி இருக்கு ?


Antony alexander
நவ 09, 2024 21:06

இது பெற்றோர்களின் கவனகுறைவு,பிள்ளைகள் என்ன செய்கிறது மாற்றங்கள் தெரிகிறதே என்று கவனித்திருக்க வேண்டும் அதற்காக கயவன் செய்தது நியாயமாகாது உச்ச பட்ச தண்டனை வழங்கிட வேண்டும்


vee srikanth
நவ 09, 2024 17:27

சூடு வைக்கவும்


Bahurudeen Ali Ahamed
நவ 09, 2024 16:37

அடப்பாவி, மகள் வயதுப்பெண்ணிடம் மிரட்டி, எப்படித்தான் மனது வந்ததோ, பெண் குழந்தைகளே நீங்கள்தான் இதுபோல் உள்ள கயவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும், அந்நியர்களிடம் இடைவெளிவிட்டு பழகுங்கள், இந்த அயோக்கியனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை