உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அப்துல் கலாம் நினைவு தினம்

அப்துல் கலாம் நினைவு தினம்

திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டியில் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் சார்பில் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அவரது படத்திற்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், வேட்டையார், கிருஷ்ணசாமி, துர்காராம், துளசி தாஸ், கந்தர்ராஜ், முத்துக்குமார், அரவிந்தன், பாஸ்கர்பாண்டி, கார்த்திகேயன் பங்கேற்றனர் சோழவந்தான் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் முன்பு சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் செந்துார்பாண்டியன், இளைஞரணி தலைவர் ஹரி, பொதுச் செயலாளர் நாகு, வடக்கு மாவட்ட தலைவர் கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கிராம வளர்ச்சித் துறை தலைவர் ஆனந்தன் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை