உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அதலையில் அடிப்படை வசதி இல்லா ஆதி திராவிடர் மயானம்

அதலையில் அடிப்படை வசதி இல்லா ஆதி திராவிடர் மயானம்

அலங்காநல்லுார்: அதலையில் ஆதிதிராவிடர் சமுதாய பயன்பாட்டில் உள்ள மயானத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இறந்தோர் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய எவ்வித வசதியும் இல்லை.மதுரை மேற்கு ஒன்றியம் அதலை ஊராட்சியில் 500 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். பரவை ரோட்டில் பொது மயானத்தில் இறந்தோர் உடலை எரிக்க தகரம் மற்றும் சிமென்ட் கொட்டகை உள்ளது. இதன் அருகே ஆதி திராவிட சமுதாய மக்களுக்கு இடம் மட்டுமே உள்ளது.முப்பது ஆண்டுகளுக்கு முன் அமைத்த தகர கொட்டகை சேதமடைந்து 10 ஆண்டுகளாகிறது. இறந்தோர் உடலை எரிக்கவும், சடங்குகளை செய்வதற்கும் எந்த வசதியும் இல்லை. வெயில் மழையில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இவ்வூரைச் சேர்ந்த மணி கூறுகையில், ''எங்கள் கிராம மயானத்தில் எந்த வசதியும் இல்லை. பத்தாண்டுகளாக மனு அளித்து வருகிறேன். கடந்த ஆகஸ்டில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.17.60 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்து தர நிர்வாக அனுமதி கோரப்பட்டுள்ளது என பி.டி.ஓ., தரப்பில் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை, என்றார்.ஊராட்சித் தலைவர் அழகு சுதா கூறுகையில், ''மயான பணிக்கு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !