உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளையாட்டு விடுதியில் மாணவர்கள் சேர்க்கை

விளையாட்டு விடுதியில் மாணவர்கள் சேர்க்கை

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் (எஸ்.டி.ஏ.டி.,) இந்தாண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.inஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் 6 இடங்களில் எஸ்.டி.ஏ.டி., கீழ் கல்லுாரி மாணவர்கள், மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோருக்கு இலவச உணவு, பயற்சி, தங்குமிடம் வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கான கூடைபந்து, கால்பந்து, ரக்பி விளையாட்டு, மாணவ, மாணவிகளுக்கான குத்துசண்டை, ஹேண்ட்பால் பயிற்சிக்கான மாநில அளவிலான தேர்வு ஏப். 8 காலை 7:00 மணிக்கு சென்னை நேரு உள் அரங்கில் நடக்கிறது. ஏப். 6 மாலை 5:00 மணிக்கு வரும் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை (95140 00777) அணுகலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை