உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதலிடம் போல் மாயத்தோற்றம் தி.மு.க., மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு

முதலிடம் போல் மாயத்தோற்றம் தி.மு.க., மீது அ.தி.மு.க., குற்றச்சாட்டு

மதுரை: மதுரையில் அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன்கூறியதாவது: அனைத்து துறைகளுக்கும், இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி மாநிலமாக உள்ளது என்றும் ஒரு தவறான தகவலை துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். நிதி ஆயோக் வெளியிட்ட தகவலில் தேசிய சராசரி விட தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலங்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது என்பதை அவர் மறைத்துள்ளார். தற்போது நிதி ஆயோக் வெளியிட்ட தகவலில் பழனிசாமி ஆட்சியோடு தி.மு.க., ஆட்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகம் பின்நோக்கி தான் உள்ளது.சாலை விபத்து அதிகரிப்பு, மாணவர்கள் கற்றல் திறன் குறைவு, உயர்கல்வி சேர்க்கையில் குறைவு, தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்பு இல்லாமை, பட்டியலின மற்றும் மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் சதவீதம் தி.மு.க., ஆட்சியில் அதிகரித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் அறிக்கையில் தேசிய சராசரியை ஒப்பிட்டு, அதில் தமிழகம் தேசிய சராசரி காட்டிலும் அதிக மதிப்பீடு பெற்றதாக விளம்பரபடுத்தி வருகிறார். ஆனால் உண்மை என்னவென்றால் தேசிய சராசரியை காட்டிலும் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை காட்டிலும் மதிப்பீட்டை அதிமாக பெற்று முதலிடத்தில் உள்ளதை மறைத்து விட்டார். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த தி.மு.க., அரசு தற்போது நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உதயநிதி உருவாக்கியுள்ளார். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி