உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சம்பா நெல்லுக்கு உர மேலாண்மை அவசியம் வேளாண் அதிகாரி யோசனை

சம்பா நெல்லுக்கு உர மேலாண்மை அவசியம் வேளாண் அதிகாரி யோசனை

மதுரை : 'சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மழை காரணமாக உர மேலாண்மை செய்வது அவசியம்' என வேளாண் இயை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:இளம்பயிர்களுக்கு 200 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழியாக தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சி குன்றியிருந்தால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒருநாள் இரவு வைத்து அதனுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து இடவேண்டும்.தண்டு உருளும் பருவம், பூக்கும் பருவ பயிர்களுக்கு 1.4 கிலோ டி.ஏ.பி, உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி அந்தக் கரைசலுடன் 2 கிலோ யூரியா, ஒரு கிலோ பொட்டாஷ் உரத்தை 190 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இதன் மூலம் மகசூல் இழப்பில் இருந்து பயிர்களை காக்கலாம்.பூச்சி, நோய் மேலாண்மையின் போது விவசாயிகள் தேவைக்கு அதிகமாக யூரியா போன்ற தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்க வேண்டும்.ஒரு ஏக்கருக்கு ஒரு தெளிப்பிற்கு 26 கிலோவுக்கு மேல் யூரியா உரமிடக் கூடாது. இயற்கையாக நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் உளுந்து, தட்டைப்பயறுகளை சாகுபடி செய்து ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டும்.மதுரை மாவட்டத்தில் யூரியா 5213 டன், டி.ஏ.பி. 556 டன், பொட்டாஷ் 1023 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2511 டன் இருப்பு உள்ளதால் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை