ஏ.ஐ., இன்குபேஷன் மையம் திறப்பு விழா
மதுரை: மதுரை அண்ணாநகரில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கும் எலிசியம் குழுமம் சார்பில் தென்னிந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) இன்குபேஷன் மையம் திறப்பு விழா நடந்தது.குழுமத் தலைவர் சுந்தரேஷ், தனலட்சுமி சுந்தரேஷ், மகன்கள் சிவேஷ், மிதுனா ஆகியோர் திறந்து வைத்தனர். நிறுவன டைரக்டர் முத்துமாரி அய்யாகண்ணு, நிர்வாக உறுப்பினர்கள் பங்கேற்றனர். எலிசியம் குழுமத்தின் 25 வது ஆண்டு விழா மற்றும் பணியாளர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் டிஜிட்ஆல் தலைவர் முத்து, யு எக்ஸ்போர்ட் தலைவர் திருப்பதிராஜன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், ஜே.சி.ஐ., சி.ஐ.ஐ., சிடா உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர். சிறந்த பணியாளர்களுக்கு பாராட்டு சான்று, பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.சுந்தரேஷ் கூறுகையில், நுாறு நாடுகளுக்கு மேல் சாப்ட்வேர் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கி வருகிறோம். எங்கள் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து சிறந்த பணிச்சூழலை உருவாக்கியுள்ளோம் என்றார்.