உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி

10 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி

மேலுார்: மேலுாரில் அ.தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசியதாவது: மேலுார் தொகுதியில் டிபன் பாக்ஸ் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என தி.மு.க., தவறான நோக்கத்தோடு உள்ளது. மக்களின் பலவீனத்தை பயன்படுத்த முயற்சித்து வருகிறது. அதனை வீழ்த்தி காட்ட வேண்டும். மதுரையில் தி.மு.க., படுகேவலமாக உள்ளது. மதுரையின் 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்றே தீரும் என்றார். எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்யன், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன்ராஜேந்திரன், வெற்றிசெழியன், குலோத்துங்கன், நகர்செயலாளர் சரவணகுமார், அ.வல்லாளபட்டி செயலாளர் உமாபதி, மாவட்ட பொறுப்பாளர் தஞ்சை காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ