மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
10 hour(s) ago
பாலகிருஷ்ணாபுரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு
10 hour(s) ago
பள்ளி வகுப்பறைக்குள் வரும் விஷ பூச்சிகள்
10 hour(s) ago
இன்று (டிச.17) மின்தடை
10 hour(s) ago
மதுரை : தொடர்ந்து பெய்து வரும் மழையால் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பாதுகாப்புக்கு கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மழைக்காலங்களில் ரயில்வே தண்டவாள பகுதியில் மண்அரிப்பு, நீர்நிலைகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு ரயில்கள் செல்வதில் பாதிப்பு ஏற்படும். சில மாதங்களுக்கு முன் துாத்துக்குடியில் பெய்த கனமழையில் பயணிகள் ரயில் சிக்கிக்கொண்டது. பெரும் போராட்டத்திற்கு பின் அவர்கள் மீட்கப்பட்டனர். அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காத வகையில் ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளவ. மின்இணைப்புகளில் உள்ள குறைபாடுகள், இவற்றை சரி செய்ய கீமேன் முதல் பொறியாளர் வரை 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிக்னல் கிடைத்து குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் செல்லும் வகையில் ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கீமேன்கள் ஆய்வு செய்யும் பகுதியில் தண்டவாளங்கள் சரியாக உள்ளன என்பதை ஸ்டேஷன் மேலாளர் உறுதி செய்வார். அதன் பிறகு ரயில் டிரைவர்களுக்கு சிக்னல் கொடுக்கப்படும். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதையும், ஆபத்து உள்ள இடங்களில் ரயிலை நிறுத்தவும் ரயில்வே பாதுகாப்பு ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் மழைகாலங்களில் விடுமுறையின்றி ரயில்வே ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago