அழகர்கோவிலில் அமரன் தரிசனம்
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நேற்று (டிச. 8) நடிகர் சிவகார்த்திகேயன், மனைவி ஆர்த்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.'அமரன்' திரைப்பட வெற்றியை தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நிலைமாலை அணிவித்து அரிவாள் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். அர்ச்சகர்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.