இட நெருக்கடியில் அங்கன்வாடி மையம்
வாடிப்பட்டி: மதுரை மேற்கு ஒன்றியம் பரவை ஊர்மெச்சிகுளத்தில் காந்தி மைதான அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். இந்த மைய கட்டடம் பழுதடைந்ததால் கடந்தாண்டு இடிக்கப்பட்டது. ஓராண்டாகியும் புதிய மையம் கட்டடப்படவில்லை.அதனருகே வாடகை ஓட்டு வீட்டில் மையம் செயல்படுகிறது. இங்கு போதிய காற்றோட்ட வசதிகள் இன்றி சிறுவர்கள் சிரமப்படுகின்றனர். ஒரே அறையில் மாணவர்களும், அவர்களுக்கு தேவையான உணவு மூடைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் ஓடி விளையாட முடியாத நிலையில் நெருக்கடியாக உள்ளது. எனவே புதிய அங்கன்வாடி மையத்தை கட்ட வேண்டும் என, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.