உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நவ.23ல் சென்னை திரும்புகிறார் அண்ணாமலை; பா.ஜ.,வில் இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்க திட்டம்

நவ.23ல் சென்னை திரும்புகிறார் அண்ணாமலை; பா.ஜ.,வில் இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்க திட்டம்

மதுரை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நவ.23ல் லண்டனில் இருந்து சென்னை திரும்புகிறார். அவரது வருகைக்குப் பின் கட்சியில் இளைஞர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க உள்ளதாக கட்சியினர் நம்பிக்கை தெரிவித்தனர்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலையில் 3 மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, கட்சித் தலைமை அனுமதியுடன் ஆக.27 ல் லண்டன் சென்றார். அங்கு அவர் முழுக்க முழுக்க பயிற்சியில் தீவிரமாக உள்ளார். இப்படிப்பில் உலகளவில் வெகு சிலரே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து தேர்வானது அண்ணாமலை மட்டுமே.அவருக்குப் பதில் தமிழக பா.ஜ.,வில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் ஒரு குழு அமைத்து செயல்படுகிறது. எச்.ராஜாவும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியில் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கையை முடுக்கி விட்டுள்ளார்.இந்நிலையில் அண்ணாமலை நவ.23 ல் சென்னை திரும்புகிறார். இதையடுத்து ஓரிரு நாளில் அவரது குடும்பத்தினர் லண்டன் செல்ல உள்ளனர். அவர்களுடன் தமிழகம் வரும் அண்ணாமலை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அரசியல் புத்தாய்வு படிப்புக்கான சான்றிதழ் பெறச் செல்வார்.இதனிடையே அண்ணாமலை கட்சியில் பல மாவட்ட நிர்வாகிகளை மாற்றியமைக்க உள்ளார். பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி புதுப்பொலிவூட்ட உள்ளார். சமீபத்தில் தி.மு.க.,வில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் என முழுக்க முழுக்க இளைஞர்களை நியமித்து துணை முதல்வர் உதயநிதி கட்சியை இளமைப்படுத்தியுள்ளார். அதேபோல தமிழக வெற்றிக் கழகம் துவங்கிய நடிகர் விஜயும் சமீபத்தில் அறிவித்துள்ள நிர்வாகிகளில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் 40 வயதில் உள்ளவர்களே.அதேபோல பா.ஜ., விலும் இளமைத் துடிப்புடன் உள்ளோரை நியமித்து 2026 ல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக உள்ளது. அதற்கேற்ப கட்சியின் தலைமை அவருக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதால் அவரது நடவடிக்கையில் வேகம் இருக்கும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை