மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
8 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
8 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
9 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
9 hour(s) ago
மதுரை : அமைச்சர்கள் உதயநிதி, மகேஷ் பெயர்களை கூறி பள்ளி கல்வித்துறையில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் ரூ.பல லட்சம் பெற்று போலி நியமன ஆணை கொடுத்து மோசடி செய்த கவுதம் 31, கைது செய்யப்பட்டார்.மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் கவுதம். தன்னை தி.மு.க., இளைஞரணியைச் சேர்ந்தவர் போல் காட்டிக்கொண்டு கட்சிக்கொடி கட்டிய காரில் வலம் வந்தார். கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை. 'அண்ணன்கள் உதயநிதி, மகேஷ் இருவரும் எனக்கு நெருக்கமானவர்கள்' என்றுக்கூறி உதயநிதியுடன் தான் இருக்கும் போட்டோவை 'விசிட்டிங் கார்டாக' வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார். இதை நம்பியவர்களிடம் பள்ளிகல்வித்துறையில் கிளார்க் உள்ளிட்ட பணிகள் வாங்கித்தருவதாககூறி பதவிக்கு தகுந்தாற்போல் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வசூலித்துள்ளார்.மதுரை கூடல்புதுார் பகுதியில் ஒரு வீட்டிற்கு வரச்செய்து பயிற்சி அளிப்பது போல் நம்ப வைத்துள்ளார். மேலும் சிலரை ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்த்து பள்ளி கல்வித்துறை, பள்ளிகளில் இருந்து வெளியாகும் விளம்பரம், டெண்டரை நோட்டமிட்டு அதை 'பாலோ ஆப்' செய்துள்ளார்.பணம் கொடுத்தவர்களிடம் விளம்பரம் செய்த பள்ளி நிறுவனங்களின் பெயரில் போலியாக பணி நியமனம் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளார். சிலர் வேலைக்கு சேர சென்றபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.இதுதொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் நேற்றிரவு கவுதம் கைது செய்யப்பட்டார்.
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago