உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறுவன் கொலையில் கைது

சிறுவன் கொலையில் கைது

சோழவந்தான் : திருவேடகம் பழைய காலனி அய்யனார் 44. இவரது மனைவி உமா 5 ஆண்டுகளுக்கு முன் கணவர் மற்றும் இரு மகள்களை பிரிந்து விவேக் என்பவருடன் சென்றார். இந்த முன் விரோதத்தால் விவேக்கின் தந்தை முத்துச்சாமியுடன் அய்யனார் தகராறு செய்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன் மது போதையில் அய்யனார் கத்தியால் தாக்கியதில் முத்துச்சாமி, அவரது மனைவி தவமணி, மகள் வழி பேரன் விஷ்ணு 7, படுகாயமடைந்தனர். நேற்று முன்தினம் விஷ்ணு இறந்தார். தலைமறைவான அய்யனாரை சோழவந்தான் போலீசார் பிடிக்க முயன்றபோது மேலக்கால் வைகை பாலத்தில் குதித்த அய்யனார் வலது கை முறிந்தது. கொலைக்கு துாண்டுதலாக இருந்த அதேபகுதி அழகர்சாமி, சுபாஷ், ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை