உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாடிப்பட்டியில் கலைச்சங்கமம்

வாடிப்பட்டியில் கலைச்சங்கமம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி மந்தையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.தமிழ்நாடு இசை நாடக கலைஞர்கள் மாநில பேரவை மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். விழா ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார்.கரகாட்டம், நையாண்டி மேளம், தப்பாட்டம், ராஜா ராணி, மரக்கால் ஆட்டம், வள்ளி திருமண இசை நாடகம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், பூமிநாதன், குருநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை