உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உதவி கமிஷனர்ஜாமின் மனு தள்ளுபடி: வரிவிதிப்பு முறைகேடு வழக்கு

உதவி கமிஷனர்ஜாமின் மனு தள்ளுபடி: வரிவிதிப்பு முறைகேடு வழக்கு

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிந்த வழக்கில் உதவி கமிஷனர் சுரேஷ்குமாரின் ஜாமின் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் 23 பேர் கைதாகினர். இவர்களில் உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், மாநகராட்சி வரிவிதிப்புக்குழு முன்னாள் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உட்பட 14 பேருக்கு உயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே ஜாமின் அனுமதித்தது. மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த், பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஜாமின் மனுவை மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நீதிமன்றத்தில் மதுரை மாநகராட்சியில் உதவி கமிஷனராக இருந்த சுரேஷ்குமார் (இடமாறுதலில் துாத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரிந்தார்) ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி சிவகடாட்சம் விசாரித்தார். அரசு மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி வாதிட்டதாவது: காளவாசலில் ஒரு வணிக வளாக கட்டடத்திற்கு ரூ.50 லட்சம் வரி வசூலித்திருக்க வேண்டும். வரி இல்லாமல் செய்வதற்காக மனுதாரர் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆதாயம் அடைந்துள்ளார். மனுதாரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார். ஜாமின் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தார். நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை