உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில் சத்குரு சங்கீத சமாஜம் சார்பில் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஜெயந்தி தின இசை விழா இரண்டு நாட்கள் நடந்தது.  நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் சமாஜ செயலாளர் ராஜாராம் வரவேற்றார். கடம் வித்வான் கார்த்திக்கிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக மதுரை மீனாட்சி விருதை விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் சங்கர சீத்தாராமன் வழங்கினார்.  அவர் பேசுகையில், ‘‘மதுரையில் பிறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி 1964ல் ஐ.நா.சபையில் பாடி வெளிநாட்டு மக்களையும் ஈர்த்தவர். வருவாயில் பெரும்பகுதியை கல்வி, மருத்துவத்திற்காக வழங்கியவர். சுப்ரபாதம் போன்ற பக்தி இசையை மக்கள் மனதில் நிலைநிறுத்தியவர்’’ என்றார். சமாஜ செயலாளர் வெங்கட்ட நாராயணன் நன்றி கூறினார். பின்னர் நடந்த இதயலயம் தாளலய இசைச் சங்கம நிகழ்ச்சியில் கார்த்திக் – கடம் மற்றும் கொன்னக்கோல், ஸ்ரீராம் – பாட்டு மற்றும் புல்லாங்குழல், ரமேஷ் – வீணை, ஸர்வேஷ் – மிருதங்கம் மற்றும் ஹாண்டுசொனி, சுந்தர் – மோர்சிங் இசைத்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை