விழிப்புணர்வு பிரசாரம்
கொட்டாம்பட்டி: வலைசேரிபட்டி சமூக ஆர்வலர் சரவணன். மேலுார், கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்ட், மக்கள் கூடும் இடங்களில் புத்தாண்டை இளைஞர்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் என நுாதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். ஆங்கில புத்தாண்டை இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாகாமலும், பண்பாடு, கலாசாரம் நாகரிகங்களை பாதுகாக்க வேண்டும். மேலும் வரப்போகும் தேர்தலில் பணம் வாங்காமல் ஓட்டளிக்க வேண்டும் என்ற பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.