மேலும் செய்திகள்
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
12-Jul-2025
மதுரை : உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு குடும்ப நலத்துறை சார்பில் மதுரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். சுகாதார இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் உடனிருந்தார். அரசு மருத்துவமனையில் பேரணி நிறைவடைந்த நிலையில் டீன் அருள் சுந்தரேஷ்குமார் முன்னிலையில் டாக்டர்கள், நர்ஸ்கள் உறுதிமொழி எடுத்தனர். குடும்பநலத்துறை துணை இயக்குநர் டாக்டர் நடராஜன், மகப்பேறு டாக்டர்கள் ஜெயகிருஷ்ணா, வளர்மதி பங்கேற்றனர். மதுரை நர்சிங் கல்லுாரி, ப்ரீத்தி, அல்ட்ரா நர்சிங் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
12-Jul-2025