உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

திருப்பரங்குன்றம் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு மையம் சார்பில் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிறுத்துதல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு இணையவழி கருத்தரங்கு நடந்தது. விழிப்புணர்வு பதாகைகள் வெளியீடு, கலாசார போட்டிகள், கருத்தரங்குகள், சுற்றுச்சூழல் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம், மரக்கன்றுகள் நடுதல், தியாகராஜர் பிரீமியர் லீக் விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் அசோக்குமார் பரிசு வழங்கினர். மையம் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ராமலிங்கசந்திரசேகர், சுந்தர கண்ணன், சுந்தர்குமார், நவீன் அரசு, சக்திராகப்பிரியா ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ