மேலும் செய்திகள்
மறுகால் பாயும் சூரக்குளம் கண்மாய்
28-Oct-2024
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரம் அயன்பாப்பாக்குடி கண்மாய்க்குள் கழிவுநீர், ஆகாயத்தாமரைகள் சூழந்துள்ளதால் கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. கண்மாயை சீரமைக்க நடவடிக்க தேவை என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.அப்பகுதியைச் சேர்ந்த மாரி கூறியதாவது: இக்கண்மாய் தண்ணீர் மூலம் 250 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பாசன வசதி பெற்றன. ஜெய்ஹிந்த்புரம், வெள்ளக்கல், மீனாட்சிநகர் பகுதிகளின் கழிவுநீர் மட்டுமின்றி சாயக்கழிவு நீரும் கண்மாய்க்குள் கலக்கிறது. இதனால் இக்கண்மாய் ஆண்டு முழுவதும் கழிவுநீரால் சூழப்பட்டு இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்நிலை தொடர்கிறது.தண்ணீரில் ஆகாயத்தாமரை படர்ந்து கொண்டே இருக்கிறது. சீமைக்கருவேல் மரங்களும் அடர்ந்துள்ளன. இதனால் தண்ணீர் மாசடைந்து விவசாயத்திற்கு உகந்ததாக இல்லை. வயல்களில் பாய்ச்சினால் நாற்றுக்கள் கருகுகின்றன. நாற்றுகளை கால்நடைகளுக்கு தீவனமாககூட பயன்படுத்த முடியவில்லை. மண்வளமும் கெட்டுவிட்டது.கண்மாய் மீன்களும் செத்து விடுகின்றன. கொசுக்கள் உற்பத்தியாகும் பண்ணையாகி விட்டது. நிலத்தடி நீர் முற்றிலும் பாதித்து, சுற்றியுள்ள கிணறுகள், ஆழ்குழாய்களிலும் தண்ணீரின் தன்மை மாறிவிட்டது. அதனை குடிக்கும் ஆடு, மாடுகள் நோய் பாதிப்புக்குள்ளாகின்றன. அவற்றை குளிப்பாட்டினால் உடல்களில் கொப்புளங்கள் ஏற்படுகிறது. இப்படி ஒரு கண்மாய் இருப்பதே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியவில்லை.இக்கண்மாய்க்குள் கலக்கும் கழிவுநீர், சாயக் கழிவுநீரை தடுத்து, ஆகாயத் தாமரைகளை அகற்றி, முழுமையாக தூர்வாரி தூய்மையான தண்ணீரை சேமிக்க நடவடிக்கை தேவை என்றார்.
28-Oct-2024