உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாட்மின்டன் போட்டி; மாணவிக்கு தங்கம்

பாட்மின்டன் போட்டி; மாணவிக்கு தங்கம்

மதுரை; தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய பாட்மின்டன் போட்டிகள் மத்திய பிரதேசம் நர்மதாபூரில் நடந்தது. இதில் தமிழக அணியின் சார்பில் மதுரை ரோட்டரி லஹரி மேல்நிலைப் பள்ளி மாணவி கமலிகா ரமணி பங்கேற்றார். இவர் 19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். பல ஆண்டுகளுக்கு பின் தமிழகம் பெற்ற தங்கப்பதக்கம் இது. மேலும் தமிழக அணி தேசிய அளவில் நான்காமிடம் பெற்றது. மாணவியை தாளாளர்கள் பர்சானா, கவுசல்யா, விஜயலட்சுமி, முதல்வர் ஸ்ரீதேவி, உடற்கல்வி ஆசிரியர் ராமஜெயம், பயிற்சியாளர் செல்வராஜ் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை