உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கட்டபொம்மன் சிலைக்கு இடம் கலெக்டரிடம் பா.ஜ.,வினர் மனு

 கட்டபொம்மன் சிலைக்கு இடம் கலெக்டரிடம் பா.ஜ.,வினர் மனு

மதுரை: மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.,வினர் நேற்று கப்பலுார் டோல் கேட் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை வைக்க இடம் கேட்டு கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு கொடுத்தனர். மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் மாநில செயலாளர் கதலிநரசிங்கப் பெருமாள், பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட செயலாளர் ஹேமலதா, அறிவுசார் பிரிவு மாநில செயலாளர் தீபா, மாவட்ட செயலாளர் லட்சுமண பிரபு, மண்டல செயலாளர் தோரநாதநாயகி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஊடக பிரிவு தலைவர் காளிதாஸ், நிர்வாகிகள் ராமதாஸ், பாஸ்கர் உட்பட பலர் உடன் சென்றனர். கதலிநரசிங்க பெருமாள், சிவலிங்கம் கூறியதாவது: 1998ல் மதுரை நகர் சுற்றுச்சாலை அமைக்கப் பட்டது. கப்பலுாரில் தேசிய நெடுஞ்சாலை யுடன் சேரும் இடத்தில் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அகற்றப்பட்டது. அப்போது சிலையை வைக்க வேறு இடம் ஒதுக்கி தருவதாகக் கூறினர். கடந்த 30 ஆண்டுகளாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது அதுபற்றி கேட்டால் அது தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என அதிகாரிகள் குழப்புகின்றனர். இடம்தர மறுக்கின்றனர். சுதந்திரத்திற்காக முதன்முதலாக முழக்கமிட்ட ஒருவருக்கு சிலை வைக்கக் கூடாதா. எனவே கட்டபொம்மன் சிலையை அந்த சந்திப்பு ரோட்டில் அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். அதனை அமைக்கா விட்டால் 2026, ஜன. 3ல் ஊர்வலமாக திரண்டு சென்று கப்பலுார் சுங்கச் சாவடி பகுதியில் மறி யலில் ஈடுபடுவோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி