மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
7 minutes ago
மண்ணை மலையாக்கும் கார்த்திகை திருவிழா
10 minutes ago
மின்திருட்டுக்கு அபராதம் அதிகாரிகளுக்கு மிரட்டல்
25 minutes ago
சோழவந்தான்: சித்தாலங்குடியில் யோகாவில் உலக சாதனை படைத்த மாணவர்களை சோழவந்தான் மண்டல் பா.ஜ., நிர்வாகிகள்பாராட்டினர். 'அல்டிமேட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' சார்பில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் சித்தாலங்குடியைச் சேர்ந்த மூன்றாமாண்டு கல்லுாரி மாணவி பிரியதர்ஷினி, கவுதம் 10ம் வகுப்பு, கோகுல்சாய், விஷ்மாயா, 9ம் வகுப்பு, ரபிஷன் 8ம் வகுப்பு, சுதர்சன் 5ம் வகுப்பு, 6 பேரும் தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் 'ஏக ஹஸ்த புஜாசனம்' நிலையில் நின்று உலக சாதனை படைத்தனர். இவர்களை சோழவந்தான் பா.ஜ., மண்டல் தலைவர் கதிர்வேல் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டினர். தொகுதி பொறுப்பாளர் பழனிவேல்சாமி, அமைப்பாளர் தங்கவேல்சாமி, மாவட்டத் துணைத் தலைவர் உதயகுமார், மண்டல் பொதுச் செயலாளர் ரமேஷ், வழக்கறிஞர் அணி முத்துமணி முன்னிலை வகித்தனர்.
7 minutes ago
10 minutes ago
25 minutes ago