உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிவகங்கை ரோட்டில் பாலம், ரவுண்டானா பணிகள் தீவிரம் அண்ணா பஸ் ஸ்டாண்ட், ஆவின் சந்திப்புகளில்

சிவகங்கை ரோட்டில் பாலம், ரவுண்டானா பணிகள் தீவிரம் அண்ணா பஸ் ஸ்டாண்ட், ஆவின் சந்திப்புகளில்

மதுரை : மதுரையில் சிவகங்கை ரோட்டில் ரவுண்டானாக்கள், பாலம் உட்பட 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. கோரிப்பாளையத்தில் இருந்து அண்ணா பஸ்ஸ்டாண்ட், ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு, ரிங்ரோடு வரை இருவழிப்பாதையாக இருந்தது. இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண விரிவுபடுத்தி மேம்பாலம், ரவுண்டானாக்கள் அமைய உள்ளன. மேலமடை சந்திப்பில் 1100 மீ., மேம்பால பணிகள் ஒன்றரை ஆண்டுக்கு முன் துவங்கி விரைவாக நடந்து வருகிறது. இதையடுத்து அண்ணா பஸ்ஸ்டாண்டில் ரவுண்டானா அமைப்பதற்காக சுற்றியுள்ள கடைகள், கட்டடங்கள் கையகப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்த ரவுண்டானாபழங்காநத்தத்தில் உள்ளது போன்று 30 மீ., விட்டத்துடன் அமைகிறது. இதேபோல ஆவின் சந்திப்பிலும் ரவுண்டானா அமைய உள்ளது. இதற்காக அருகில் உள்ள மாணவியர் விடுதியை அப்புறப்படுத்தும் பணியும் துவங்கிவிட்டன. இந்த இரு ரவுண்டானாக்களுக்கும் இடையே உள்ள பகுதியில் ரோடு விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன. அதற்கான இழப்பீடு தொகை வழங்கும் பணிகள் நடக்கின்றன. இந்த ரோட்டில் மேம்பாலம் அமைய உள்ள பகுதியை தாண்டி கோமதிபுரம் பகுதியிலும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்தப் பகுதியில் குடிநீர் குழாய்கள், பாதாள சாக்கடை வசதிகளை மாற்றி அமைத்து சீரமைக்கும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. தற்போது காஸ் வினியோக குழாய்களை சரிசெய்யும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த் உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். இதையடுத்து ரிங்ரோடு அருகே வண்டியூர் கண்மாயின் கலுங்கு பகுதியில் உள்ள 8 மீ., பாலத்தை 15 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்த வேண்டியுள்ளது. இப்பணிகளுக்கு அடுத்த வாரம் டெண்டர் விடுவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. இப்பாலத்தை விரிவுபடுத்தி கட்ட ரூ.3.75 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகளும் துவங்கி ஆறுமாதத்திற்குள் முடிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

G VEERAMANIKANDAN
ஆக 29, 2025 00:16

தெற்கு வாசல் நான்கு வழி புதிய மேம்பாலம் மற்றும் வில்லாபுரம் முதல் அவனியாபுரம் பெரியார் சிலை வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை