உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் அவதி

பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் அவதி

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் யு.பி.எஸ்., ஜெனரேட்டர் வசதி இல்லாததால் 'டவர்' பிரச்னை ஏற்படுகிறது. மின்சாரம் இல்லாத நேரங்களில் அலைபேசி 'நெட்வொர்க்' வேலை செய்வதில்லை. வாடிக்கையாளர்கள் கூறியதாவது: மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு நாளன்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின்சப்ளை நிறுத்தப்படுகிறது. அன்று முழுவதும் பி.எஸ்.என்.எல்., டவர் செயலிழந்து 'சிக்னல்' கிடைக்காது. பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., புதிய திட்டங்களை அறிவிக்கிறது. நெட்வொர்க் இல்லாமல் அதை வாங்கி என்ன பயன். சிறப்பு சலுகைகள் வழங்கினாலும் பயன்படுத்த முடியவில்லை என்றால் என்னதான் செய்வது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை