உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேனரால் காணாமல் போன பஸ் ஸ்டாப்

பேனரால் காணாமல் போன பஸ் ஸ்டாப்

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். விபத்து அபாயமும் ஏற்படுகிறது.திருமங்கலம் நகராட்சி, ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகிறது. இந்த பேனர்கள் வைப்பதற்கு எவரும் முறையான அனுமதி வாங்குவது இல்லை. அதிகாரிகள் கண்காணிப்பதும் இல்லை.2 நாட்களுக்கு முன்பு திருமங்கலம் - செக்கானுாரணி ரோட்டில் வாகைக்குளம் பஸ் ஸ்டாப்பை மறைத்து பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பஸ் ஸ்டாப் இருக்கும் இடம் தெரியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாப்புக்கு வரும் முதியோர் முதல் குழந்தைகள் வரை வெயிலில் நிற்கும் சூழல் உள்ளது. எனவே அனுமதியின்றி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !