உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பறவைகளை கணக்கெடுக்க அழைப்பு

 பறவைகளை கணக்கெடுக்க அழைப்பு

மதுரை,மதுரை வனக்கோட்டம் சார்பில் ஒருங்கிணைந்த நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் தொடங்க உள்ளன. நாளை (டிச. 27) மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி வரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பயிற்சி நடக்கிறது. டிச. 28 காலை 6:00 முதல் 11:00 மணி வரை நீர்நிலைகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்படுகிறது. சாமநத்தம், நிலையூர், வண்டியூர், விரகனூர் அணை, சாத்தையார் அணை உட்பட போன்ற பல்லுயிர் பெருக்கம் நிறைந்த 27 நீர்நிலைகளில் நடத்தப்படுகிறது.கருந்தலை அரிவாள் மூக்கன், பூநாரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நாரைகள், கொக்குகளின் வருகையை கண்காணித்து ஆய்வுக்குழுவினர் பதிவு செய்ய உள்ளனர். மாணவர்கள், போட்டோகிராபர்கள், பொதுமக்கள் கணக்கெடுப்பில் பங்கேற்கலாம். அனுபவம் வாய்ந்த வனத்துறையினர், பறவையியல் வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றலாம். பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களை 90472 86690 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை